மேஷம் மாதாந்திர ராசிபலன் - Aries Monthly Horoscope in Tamil

மேஷம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை (This Month Mesham rasipalan): மேஷம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களே...!

ஆடி மாதத் தொடக்கத்தில் எதிர்பார்த்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. மனைவியின் கருத்தை அனுசரித்துப் போவது சில பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏதுவாக இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் நடக்கும். திருமண நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து வருவதால் உறவினர்களின் அன்பும் பாசமும் வீட்டில் தவழும்.

வியாபாரம் சிறப்பாக நடக்கும். கையில் காசு பணம் தேவைக்கு அதிகமாகவே புழங்கும். தங்க நகைகள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். மனைவி பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். ஒரு சிலர் தீர்த்த யாத்திரை செல்லுகின்ற வாய்ப்பை பெறுவார்கள். ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால் குளிர் பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அரசியல்வாதி ஒருவரின் உதவியால் பிள்ளைகளின் கல்விக்கு மேன்மை உண்டாகும்.

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உற்சாகமான நிலை காணப்படும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். வேலைகளை எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்காது. மாத பிற்பகுதியில் அரசு பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

தொழில் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் இருக்கின்ற சிரமங்களை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்பச் சுமைகளை தாங்கும் பெண்களுக்கு சந்தோஷம் தரும் மாதமாக இருக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் எதிர்பார்த்த சலுகைகளை அடைவார்கள். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். புதிய பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17 20 24 27 29 31 ஆகஸ்ட் 1 6 10 14 17

அதிர்ஷ்ட எண்கள்: 9,7,6,1

சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 24 அதிகாலை முதல் 25 26 27 பிற்பகல் வரை.

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடும், 'கந்தசஷ்டிக் கவசம்'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தேதி 2 - ஆடி - பராபவ வருடம் சனி
நாள் சனி
திதி பஞ்சமி (up to July 19, 3:43 am) சஷ்டி (up to July 20, 3:30 am)
நட்சத்திரம் பூரம் (up to 6:00 pm) உத்திரம் (up to July 19,6:11 pm)
யோகம் சித்த-மரண யோகம்
நல்ல நேரம் 10:45 - 11:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm
இராகு காலம் காலை 9.00 - 10.30
எமகண்டம் மதியம் 1.30 - 3.00
குளிகை காலை 6.00 - 7.30
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்
சூரியோதயம் 5:54 AM
சூரிய அஸ்தமனம் 6:35 PM
சந்திரோதயம் Jul 18 9:28 AM
சந்திர அஸ்தமனம் Jul 18 9:54 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+