மகரம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Makaram rasipalan): மகரம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மகர ராசி அன்பர்களே...
மாதத் தொடக்கத்தில் குடும்பத்தில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இருப்பினும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடப்பதால் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருக்கெடுக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கையும் சிலருக்கு ஏற்படக்கூடும். புதிய மின்சார மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பு, சிலருக்கு ஏற்படலாம். பிள்ளைகளின் வேலை மற்றும் படிப்புக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டியிருக்கும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் மிகுந்த கவனம் தேவை. சிலருக்கு இடம் மாற்றமும் ஏற்படக்கூடும். அதிகாரிகளின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. மாத பிற்பகுதியில் அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக போட்டியாளர்களால் மறைமுக பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. பற்று வரவில் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 18 20 21 25 26 27 29 30 அக்டோபர் 1 2 3 5 6 7 9 10 13 14 17
அதிர்ஷ்ட எண்கள்: 8,1,2,9
சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 7 இரவு முதல் 8 9 இரவு வரை.
பரிகாரம்: சனி பகவான் வழிபாடும், 'ஓம் அருளுங்கால் இனியவனே போற்றி,
ஓம் அண்டியவர்க்கு அருள்பவனே போற்றி'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |