கும்பம் மாதாந்திர ராசிபலன் - Aquarius Monthly Horoscope in Tamil

கும்பம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Kumbham rasipalan): கும்பம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களே...

புரட்டாசி மாதம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் மாதமாக அமையப் போகிறது. உறவினர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். இருப்பினும் அதை பொறுமையாக கையாள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து ஒற்றுமை மிகவும் முக்கியம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் இல்லற வாழ்க்கை மிக இன்பமாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து இருப்பதால் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். அவர்களோடு மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்ற சந்தர்ப்பமும் அமையும்.

வரவுகள் அதிகரித்து கையில் தாராளமாக பணம் புழங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை பூர்த்தி செய்து சந்தோஷத்தை உருவாக்குவீர்கள். வேலை காரணமாக சிலர் வெளிநாட்டுக்கு பறக்க வேண்டிய வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று மனைவி பிள்ளைகளின் கனவை நனவாக மாற்றுவீர்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆடை ஆபரணங்கள் வாங்கும் ஆசையையும் நிறைவேற்றுவீர்கள். மின்சார மின்னணு சாதனங்களும் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். படிப்புக்காக பிள்ளைகள் வெளிநாடு செல்லும் நிலை உருவாகும். அதற்கான ஏற்பாடுகளை பெரிய மனிதர்கள் மூலமாக செய்வீர்கள்.

கடினமான வேலையைக் கூட அலுவலகத்தில் சுலபமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றல் ஏற்படும். மாத பிற்பகுதியில் பணி அழுத்தம் அதிகரிக்கும். எச்சரிக்கையாக வேலை பார்க்க வேண்டும்.

தொழிலும் வியாபாரமும் ஏற்றமாக இருக்கும். போட்டியாளர்களின் எதிர்ப்புகள் முனை மழுங்கிப் போகும். வியாபாரம் நன்றாக நடப்பதால் கடையை விரிவுபடுத்துவீர்கள். வரவு செலவு கணக்குகளில் கவனமுடன் இருக்க வேண்டும்.

இல்லத்தரசிகளாக விளங்கும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் கிடைக்கும் மாதமாக இது அமையும். ஆடை ஆபரணங்கள் பிராப்த்தி உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கிடைக்கலாம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  செப்டம்பர் 19 20 25 26 27 29 அக்டோபர் 1 3 4 6 8 9 11 15 16

அதிர்ஷ்ட எண்கள்: 8,9,4,3

சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 9 இரவு முதல் 10 11 இரவு வரை.

பரிகாரம்: சனிபகவான் வழிபாடும்,
'ஓம் அருளுங்கால் இனியவனே போற்றி,
ஓம் அண்டியவர்க்கு அருள்பவனே போற்றி'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தேதி 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm)
நட்சத்திரம் ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:52 PM
சந்திரோதயம் Oct 06 1:54 AM
சந்திர அஸ்தமனம் Oct 06 2:53 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+