துலா ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
துலாம் ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் திட்டம் போட்டு தொழிலை நடத்துவீர்கள். நீண்ட தூர பயணங்கள் லாபத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத உயர்வு உண்டாகும். ஆன்லைன் வர்த்தகத்தில் சிறப்பான வருமானம் கிடைக்கும். வியாபாரம் அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் பெருகும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி வாய்ப்பு குவியும்.
விசாகம் நட்சத்திரக்காரர்கள் அந்தஸ்து உயரும்.
இன்று உங்கள் பலம்:
செயல் திறனும் தொழில் அறிவும் வியாபாரத்திற்கு பலம் சேர்க்கும். அரசு உதவிகள் வந்து சேரும்.
இன்று உங்கள் பலவீனம்:
நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது நல்லதல்ல. மனைவியின் வேண்டுகோளை தள்ளிப் போடாதீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 அன்றாட கணக்கு வழக்கில் அலட்சியம் காட்டக்கூடாது.
2 அலுவலகத்தில் மனச்சுமையோடு வேலை பார்க்கக் கூடாது.
3 சக ஊழியரின் விஷயத்தில் தலையிடக்கூடாது.
அதிர்ஷ்ட எண்: 6,3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
| தேதி | 2 - கார்த்திகை - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | நவமி (up to November 19, 7:06 am) |
| நட்சத்திரம் | அவிட்டம் (up to 4:34 am) சதயம் (up to November 19,6:10 am) பூரட்டாதி (up to November 20,6:56 am) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 11:15 - 12:00 pm / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | ஆயில்யம் |
| சூரியோதயம் | 6:12 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:35 PM |
| சந்திரோதயம் | Nov 18 12:54 PM |
| சந்திர அஸ்தமனம் | Nov 19 1:01 AM |