மீன ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
மீன ராசி அன்பர்களே! தேடிய நன்மைகள் வீடு வருகின்ற நாள் இது. வியாபாரத்தில் மிகப்பெரிய லாபமடைவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கிழக்கு திசை பயணத்தால் ஒரு பெரிய நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நினைத்துப் பார்க்காத லாபம் கிட்டும். தொழில்துறையில் எதிர்ப்புகள் விலகும். உங்களைக் கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுப் போவது நிச்சயம். பெண்களால் ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் சித்திக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு பெறுவார்கள்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள் மேன்மை அடைவார்.
இன்று உங்கள் பலம்:
சாமர்த்தியமான பேச்சால் மற்றவருடைய மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். வேலை இடத்து குறைகளை நுணுக்கமாகக் கண்டுபிடிப்பீர்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
எந்த காரியத்திலும் சடாரென கோபப்பட்டு விடுவீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை பேசி விடுவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 உரிமை இல்லாத இடத்தில் உறவு நெருக்கம் வேண்டாம்.
2 நிலம் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
3 நீண்ட தூர பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 8,5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.
வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
| தேதி | 2 - ஆடி - பராபவ வருடம் சனி |
| நாள் | சனி |
| திதி | பஞ்சமி (up to July 19, 3:43 am) சஷ்டி (up to July 20, 3:30 am) |
| நட்சத்திரம் | பூரம் (up to 6:00 pm) உத்திரம் (up to July 19,6:11 pm) |
| யோகம் | சித்த-மரண யோகம் |
| நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm |
| இராகு காலம் | காலை 9.00 - 10.30 |
| எமகண்டம் | மதியம் 1.30 - 3.00 |
| குளிகை | காலை 6.00 - 7.30 |
| சூலம் | கிழக்கு |
| பரிகாரம் | தயிர் |
| சந்திராஷ்டமம் | திருவோணம், அவிட்டம் |
| சூரியோதயம் | 5:54 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:35 PM |
| சந்திரோதயம் | Jul 18 9:28 AM |
| சந்திர அஸ்தமனம் | Jul 18 9:54 PM |