புலிகளின் கண்ணிவெடியில் போலீஸ் பஸ் சேதம்
கொழும்பு:
கொழும்பில் போலீஸார் சென்ற பஸ்சை விடுதலைப்புலிகள் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர்.
இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் கடந்த 17 ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. இந்தப்போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வன்னிப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாம் மீது இலங்கை ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20விடுதலைப்புலிகள் இறந்தனர். விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
இலங்கை வவுனியா புறநகர்ப்பகுதியில் போலீஸார் சென்ற பஸ்சை விடுதலைப்புலிகள் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர். இதில் 7 போலீஸார் படுகாயம்அடைந்தனர்.
குண்டுவெடிப்பில் 3 பேர் காயம்
இதற்கிடையே, புதிய அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் புத்த சாமியார்கள் கூட்டம், கொழும்பு நகரில் உள்ள நரகைன் பேட்டா என்ற இடத்தில் உள்ளகட்டிடத்தில் 2 வது மாடியில் நடந்தது.
இக்கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட புத்த சாமியார்கள் கலந்து கொண்டனர். புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து செவ்வாய்க்கிழமை போராட்டம்நடத்துவது என அவர்கள் முடிவு செய்தனர்.
இதற்கிடையே கூட்டத்தில் கலந்து கொண்ட 3 சிங்களர்கள் வைத்திருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்தது. அதில் அந்த 3 பேரும் படுகாயமடைந்த நிலையில்மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த சிங்களர்கள் 3 பேரும் கூட்டத்தில் வீசுவதற்காக வைத்திருந்த குண்டு முன்னதாகவே வெடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications