காட்டுக்குள் ஒரு வீட்டில் ...
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் காட்டுக்குள் உள்ள வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாதெரிவித்தார்.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்களையும் மீட்கும் முயற்சியில் தமிழக,கர்நாடக அரசுகள் ஈடுபட்டுள்ளன. அவர்களை விடுவிக்க 10 கோரிக்கைகளை வீரப்பன் கொடுத்துள்ளான்.
இக் கோரிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதியுடன் விவாதித்தபின் ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூர் திரும்பினார்.
பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த அவர், தமிழக முதல்வர் கருணாநிதியுடனும், அதிகாரிகளுடனும் வீரப்பன்கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். வீரப்பனின் 10 கோரிக்கைகளையும் பரிசீலித்து, அதில் சிலகோரிக்கைகளை ஏற்கவும், பரிசீலிக்கவும் முடிவுசெய்யப்பட்டது.
அரசுத் தரப்பில் வீரப்பனுக்கு அனுப்பப்பட்ட தகவலும் சென்று அடைந்து விட்டது. அரசு தூதர், டாக்டர்ராஜ்குமாரை சந்தித்த தகவல் கிடைத்ததும் எனது மனபாரம் குறைந்து விட்டது. தற்போது நிம்மதி ஏற்பட்டுள்ளது.
காட்டுக்குள் உள்ள ஒரு வீட்டில் ராஜ்குமாரும், மற்றவர்களும் பத்திரமாக உள்ளனர் என்றார் கிருஷ்ணா.
பின்னர் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்ற முதல்வர் கிருஷ்ணா, அங்கு ராஜ்குமார் மனைவி பர்வதம்மா, மகன்கள்சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
அவர்களிடம் நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் மூன்று பேரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications