மீண்டும் மோத வருகிறார் மைக் டைசன்
Subscribe to Oneindia Tamil
மலேசியா:
சர்ச்சைக்குரிய முன்னாள் ஹெவிவெயிட் உலகக் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் மலேசியாவில் நடக்கும் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொள்கிறார்.
ஜனவரி மாதம் 20 ம் தேதி நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இவர் கலந்து கொள்வார். இவர் யாருடன்மோதுவார் என்பது குறித்து நவம்பர் மாதம் தெரிவிக்கப்படும்.
1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் கடைசியாக உலகக் குத்துச்சண்டைப் போட்டி நடந்தது. அப்போட்டியில் முகமதுஅலியும், ஜோ பக்னரும் மோதினர். ஜனவரியில் நடக்கும் குத்துச்சண்டைப் போட்டியின்போது, டைசனையும்,அவருடன் மோதும் வீரரையும் முகமது அலி அறிமுகப்படுத்தி வைப்பார்.
போட்டி நடைபெறவுள்ள அரங்கத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications