இன்று இரவு சென்னை திரும்புகிறார் நக்கீரன் கோபால்
சென்னை:
சற்று முன் கிடைத்த தகவலின்படி அரசின் தூதராக வீரப்பனை சந்திக்க காட்டிற்கு சென்றநக்கீரன் கோபால் இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்று தெரியவந்துள்ளது.
அவர் வீரப்பனை சந்தித்துவிட்டு திரும்பு வருகிறார்
இத்தகவல் நக்கீரன் பத்திரிக்கை தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.
வீரப்பனின் கோரிக்கைகளுக்கான, தமிழக மற்றும் கர்நாடக அரசின் பதில்களைவீரப்பன் ஏற்றுக்கொண்டாரா? ராஜ்குமார் எப்பொழுது காட்டிலிருந்து வருவார்?என்பது பற்றி எந்த உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
முன்னதாக நக்கீரன் பத்திரிகை அலுவலகத்திலிருந்து நமக்கு வந்த ஃபேக்ஸ்செய்தியில்,
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கும் முயற்சியில் காட்டுக்குள் சென்றுள்ள அரசு தூதரானநக்கீரன் கோபால் , வீரப்பனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தபேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கின்றது.
இந்த உறுதியான தகவலை காட்டிலிருந்து வெளியே வந்த ஒரு நபர் நேற்றிரவு (7-8-2000) நள்ளிரவில் எங்களிடம் தெரிவித்தார்.ஆசிரியரிடமிருந்து விரைவில் நல்லதகவலை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு பேக்ஸ் செய்தியில் நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications