அனுபவ் "அனுபவித்த சொத்துக்கள் ரூ. 1 கோடிக்கு ஏலம்
சென்னை:
பொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் திரட்டி அதைத் திருப்பித் தராமல்ஏமாற்றிய அனுபவ் நிதி நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்சென்னையில் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. இதுவரை ரூ. 1 கோடியே 3லட்சம் வசூலாகியுள்ளது.
தேக்கு மரப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம்பொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை அனுபவ் நிறுவனம் முதலீடாகப்பெற்றது. ஆனால், அந்த முதலீட்டுத் தொகை முதிர்வு அடைந்த பிறகும் பணத்தைத்திருப்பித் தராமல் அந் நிறுவனத்தினர் ஏமாற்றினர்.
இதையடுத்து அந் நிறுவனத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் பொதுமக்கள் புகார் கூறினர். இப் புகாரின் பேரில் அனுபவ் நிறுவன நிர்வாக இயக்குநர்அனுபவ் நடேசன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள அந் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச்சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப் பொருட்களை ஏலம் விட்டுஅதன் மூலம்கிடைக்கும் பணத்தை முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தர போலீஸார் முடிவுசெய்தனர்.
அனுபவ் நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொருளாதாரக்குற்றப்பிரிவுப் போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.ஜி.மெளரியா, நீதிமன்றத்தின் அனுமதிபெற்று பொருட்களை ஏலம் விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததை அடுத்து அனுபவ் நறுவனத்தின் பொருட்கள்சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமைஏலம் விடப்பட்டன.
மேஜை, நாற்காலிகள், மின் விசிறிகள், கார், ஜீப் உள்ளிட்ட பொருட்கள் ஏலம்விடப்பட்டன. நெல்லை, போடி, சங்கரன்கோயில் பகுதியில் இருந்த அனுபவ்நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏற்கெனவே ஏலம்விடப்பட்டன.
சென்னையின் பிற கிளைகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கிளைகளில் பறிமுதல்செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் அடுத்து ஏலம் விடப்படவுள்ளன.
இதுவரை விடப்பட்ட ஏலத்தின் மூலம் ரூ.1 கோடியே 3 லட்சம் வசூலாகியுள்ளது என்றுபோலீஸார் தெரிவித்தனர்.
அனுபவ் நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களும் ஏலம் விடப்பட்ட பிறகு எவ்வளவுதொகை வசூலாகிறதோ அதற்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்குப் பணம் பிரித்துக்கொடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications