மறியல் செய்த 500 கம்யூ. தொண்டர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையைக் கண்டித்து மறியல் செய்ய முயன்றஇந்தியக் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதிய ஏற்றுமதிக் கொள்கையை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இக்கொள்கையின் மூலம் மத்திய அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்துபொருட்களை இறக்குமதி செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 714 பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 715பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

அளவுக் கட்டுப்பாடும், அனுமதியும் இல்லாமல் இறக்குமதி சலுகைவழங்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் தொழிலும், விவசாயமும் நலிந்து போகும்,மேலும் வெளிநாடுகளின் விற்பனைச் சந்தையாக இந்தியா மாறிவிடும்.

ஆகவே, மத்திய அரசின் இந்த தாராள இறக்குமதிக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடுமுழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் எதிரே வலது கம்யூனிஸ்ட்கட்சியினர் புதன்கிழமை காலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தென் சென்னை மாவட்ட வலது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குறளகம் எதிரே நடந்தபோராட்டத்துக்கு கடசியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபு, வடசென்னைமாவட்டச் செயலாளர் சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இப் போராட்டத்துக்குப் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்துபோராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் தொண்டர்கள் 500 பேரைப் போலீசார்கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+