பணத்தைத் திருப்பிக் கேட்டவரைக் கொன்ற அண்ணன், தம்பி
கோவை:
கோவையில் வீட்டை விற்றவர் பணத்தைத் திருப்பிக் கேட்டதால், அவரை வெட்டிக் கொன்ற அண்ணன் தம்பிகளுக்கு ஆயுள் தண்டனைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மதுக்கரையை அடுத்துள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சிமென்ட் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்தார். ஓய்வு பெற்ற பின்னர் மதுக்கரை அருகே ஒரு வீடு வாங்கினார். சிறிது நாட்கள் கழித்து இந்த வீட்டை விற்க முடிவுசெய்தார்.
சிவசண்முகம், அவரது தம்பி சம்பத்குமார் ஆகியோருக்கு வீட்டை ரூ 4 லட்சத்திற்கு விற்றார். வீட்டை மாற்றி எழுதிய பிறகுஇருவருக்கும் பணம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தனர். இதை நம்பிய பழனிச்சாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தொடர்ந்து வற்புறுத்தியதால், பணம் தருவதாக பழனிச்சாமியை, சிவசண்முகம் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.கல்குழி என்ற இடத்தில் வைத்து பழனிச்சாமியை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதல் பலத்த காயமடைந்த பழனிச்சாமி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரைப் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கோவை இரண்டாவதுகூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சிவசண்முகம் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனைவிதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications