ஜெ.வை முதல்வர் ஆக்கியே தீருவேன் .. தாமரைக்கனி முழக்கம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிப்புத்தூர்:

ஜெயலலிதாவை மீண்டும் தமிழக முதல்வர் ஆக்குவதே லட்சியம். அ.தி.மு.க. வைவிட்டு ஒரு போதும் விலக மாட்டேன் என்று அக் கட்சியின் தமிழக சட்டப் பேரவைஉறுப்பினர் தாமரைக்கனி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

1998-ம் ஆண்டு எங்கள் கூட்டணியில் வைகோ இருந்தார். அ.தி.மு.க.தொண்டர்களின் உழைப்பாலும், ஜெயலலிதாவின் செல்வாக்கினாலும் வைகோவைநாடாளுமன்ற உறுப்பினராக்கினோம்.

சமீபத்திய நாடளுமன்றச் தேர்தலின் போது மாவட்டச் செயலாளராக இருநதேன்.அப்போது அருப்புக்கோட்டை இடைத் தேர்தல் நடைபெற்றது. அத் தேர்தலில் தேர்தல்பணிக்குழு சரியாக வேலை செய்யவில்லை. அதனால், அத் தேர்தலில் தோல்விஏற்பட்டது.

இதனால் நான் ம.தி.மு.க. வுக்கு போய்விடுவேன் என்று சிலர் பொய் பிரசாரம்செய்தனர். ஆனால், அப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்தகைய பொய்யான பிரச்சாரத்தை சிலர் மேற்கொண்டுவருகின்றனர்.

தி.மு.க. சூழ்ச்சி வலையில் விழுந்து சட்டப் பேரவையில் என்னை அ.தி.மு.க-1 என்றுசபாநாயகர் அறிவித்ததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், திருநாவுக்கரசு, கருணாநிதி முயற்சியால் அ.தி.மு,க. 1 , அ.தி.மு.க. 2 என்றுஅ.தி.மு.கவை உடைத்து இரட்டை இலை சின்னத்தையும் முடக்க நினைத்தனர்.அதற்கும் நான் சம்மதிக்கவில்லை.

ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வே உண்மையான அ.தி.மு.க. என்றுஏற்றுக் கொண்டேன். அவரது தலைமையின் கீழ்தான் செயல்பட்டு வருகிறேன்.

சமீபத்தில் நான் கோமாதா பூஜை செய்தேன். அதனால், நான் பா.ஜ.க.வில் சேரப்போவதாக துர் பிரச்சாரம் செயய்ப்பட்டது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றுகேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க.தான் தெரியும். நான் எம்.ஜி.ஆர் ரசிகன்.இந்த இயக்கத்தைத் தவிர வேறு இயக்கம் எதுவும் தெரியாது.

ஜெயலலிதா ஒருவரால்தான் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்தக் கட்சியை காபாபாற்றமுடியும். மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் முடியும்.

2001-ல் ஜெயலலிதாவை முதல்வராக்குவதே எனது லட்சியம். என்னைப் போன்றஅ.தி.மு.க. தொண்டர்களின் லட்சியமும் அதுவே.

எம்.ஜி.ஆரின் நல்லாசியுடன் ஜெயலலிதாவை முதல்வராக்குவது என்று சபதம் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் தாமர்ைககனி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+