"கண்ணுக்குத் தெரியாமல் நிறைய வீரப்பன் ....

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல் நிறைய வீரப்பன்கள் இருப்பதாக கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் நல்லகண்ணு.

கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்ற வீரப்பன். அவரைவிடுவிக்க வீரபபன் விதித்துள்ள நிபந்தனைகள் வித்தியாசமாக உள்ளன என்றும் நல்லகண்ணுகூறியுள்ளார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

வீரப்பனின் தற்போதைய கோரிக்கைகள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளன. இதுவரை இதுபோன்ற கோரிக்கைகளை வீரப்பன் விடுத்த்ததில்லை.

அரசின் கவனத்தை திசை திருப்பவே இது போன்ற கடத்தல்கள் நடக்கின்றன.

தமிழகத்தில் கன்னடர்கள் வசிக்கிறார்கள். கர்நாடகத்தில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்தகடத்தல் சம்பவத்தால் இரு தரப்பினரும் உணர்ச்சி வசப்பட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்ககர்நாடக, தமிழக அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணுக்கு தெரிந்து ஒரு வீரப்பன்தான். ஆனால், நமது கண்ணுக்கு தெரியாமல் நிறைய வீரப்பன்கள்இருக்கிறார்கள் என்றார் நல்லகண்ணு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+