வீரப்பனுடன் பா.ம.க.வுக்குத் தொடர்பு ..வாழப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்புஉண்டு என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்று ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அவர்களை விடுவிப்பதற்கானசாத்தியக்கூறுகள் ஏற்படவில்லை.

தமிழக, கர்நாடக முதல்வர்கள் தங்கள் முழுக்கவனம் செலுத்தி வந்தாலும் இப்பிரச்சனையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. அரசுத் தூதராக நக்கீரன் கோபால்காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்திக்க காத்திருக்கும் போதே வேறொருவர் மூலம்கேசட்டை வீர்ப்பன் அனுப்பியுள்ளான்.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும் போதுதான் காவிரிப் பிரச்சனை பற்றிஅரசியல்வாதிகளுக்கு நினைவு வருகிறது. அது போலத்தான் யாரையாவது வீரப்பன்கடத்திச் சென்றால்தான் அவனது விஷயம் எல்லாருக்கும் நினைவுக்கு வருகிறது. இதுவருந்தத்தக்கதாகும்.

சில மாதங்களுக்கு முன் வீரப்பனின் ஆள் பலத்தை வெகுவாகக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். தம்பி இறந்து விட்டதால் வீரப்பன் மனமுடைந்து விட்டான் என்றுபோலீசார் தெரிவித்தனர். ஆனால்,இப்போது வீரப்பனுடன் 100-க்கும்மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தெரிகிறது. இது போலீசார் வெட்கப்பட வேண்டியவிஷயம்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் தாளவாடி பகுதியில்முகாமிட்டு வீரப்பனுடன் கூட்டு சேர்ந்திருபப்து அதிர்ச்சியையும், போலீசாரின்மெத்தனத்தையும் காட்டுகிறது.

ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் கூறியுள்ள கோரிக்கைகள் தீவிரவாத இயக்கங்களின்அரசியல் கலந்த கோரிக்கையாகவே இருக்கின்றன. ராஜ்குமாரைக் கடத்தியதற்கானஉண்மையான காரணம் என்னவென்றே தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் உள்பட தீவிரவாத இயக்கங்களுடன் வீரப்பனுக்குத் தொடர்புஉள்ளது.

வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரும் மற்றவர்களும் மீட்கப்பட வேண்டும்என்பதுதான் இபபோதைய முக்கியமான விஷயமாகும். வீரப்பனுக்கு தோப்புக்கரணம்போடும் அரசைவிட அப்படிப்பட்ட அரசு இல்லாமல் இருப்பதே நல்லது.

ராஜ்குமார் பத்திரமாக மீட்கப்பட்ட பிறகு வீரப்பனை ஒழித்துக் கட்ட மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இந் நிலை நீடித்தால் தமிழகத்தில் பல வீரப்பன்களைஉருவாக்கி விடுவார்கள்.

வீரப்பனுக்கும், பா.ம.க.க. வுக்கும் தொடர்பில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளதை நான்நம்ப மாட்டேன். பா.ம.க. பிரமுக்ரகளுக்கும் உள்ள தொடர்பு எனக்கு நன்றாகத்தெரியும்.

வீரப்பன் பணம் கொடுக்காமல் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலைச் சந்திக்கவில்லை.பா.ம.க.வின் தேர்தல் செலவுவு முழுவதும் வீரப்பன் கொடுக்கும் பணம்தான்.

ராஜ்குமாரை மீட்க இரு மாநிஸ அரசுகளும் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள்திருப்திகரமாகவே உள்ளது. இப் பிரச்சனையை தைரியத்துடன் எதிர் கொண்டு தீர்க்கஇரு அரசுகளும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+