3-வது முறையும் நீதிமன்றத்துக்கு வரவில்லை சசி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்றாவது முறையும்நீதிமன்றத்துக்கு வரவில்லை சசிகலா.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதுவருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரிக்க்ப்பட்டு வருகிறது.இவ்வழக்கில் ஜெயலலிதா தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சுதாகரன், இளவரசி மட்டும்விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனக். சசிகலா ஆஜராகாமல் இருந்தார்.

இதை எதிர்த்த அரசு தரப்பு வழக்கிறிஞர், விசாரணையின் போது நீதிமன்றத்தில் சசிகலாஆஜராக வேண்டும் என்று உத்தரவிடும்படி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.அதன்படி ஜுலை 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலாவுக்குஉத்தரவிடப்பட்டது.

அன்றைய தினம் ஹைதராபாத்தில் இருந்தததால் நீதிமன்றத்தில் சசிகலாஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுதது இவ் வழக்குவிசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்,

ஆனால், ஆகஸ்ட் 9-ம் தேதி புதன்கிழமையும் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகவில்லை.ஹைதராபாத்தில் தங்கி சசிகலா சிகிச்சை பெறுகிறார். விரைவில் சிகிச்சைமுடிந்துவிடும். அடுத்த வாரம் அவர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றுஅவரது வழக்கறிஞர்கள் கூறினர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன் ஏற்றுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+