போலீஸ்காரர்களைத் தேடி வந்த "சயனைட் ஸ்வீட்
கோவை:
கோவை போலீஸ் நிலையத்துக்கு வந்த சயனைட் தடவிய ஸ்வீட் பாக்கெட்டால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.இந்த ஸ்வீட்டை அனுப்பியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் போலீஸ் நிலையம் பிரிக்கப்பட்டு பி1, பி2 என இரண்டு நிலையங்களாக மாற்றப்பட்டது. புதிதாகஉருவாக்கப்பட்ட பி2 போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்முத்துராஜ் தலைமையில் 40 போலீசார் செயல்பட்டுவருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பார்சல் போலீஸ் நிலையத்துக்கு வந்தது. கொரியர் மூலம் வந்த அந்தபார்சலைப் போலீசார் பெற்று, இன்ஸ்பெக்டர் முத்துராஜிடம் கொடுப்பதற்காக வைத்திருந்தனர். அந்த பார்சலைஅடுத்த நாள் வந்த இன்ஸ்பெக்டர் முத்துராஜ், பிரிக்காமல் அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல்கொடுத்தார்.
உயர் அதிகாரிகள் அதில் வெடிகுண்டு ஏதேனும் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களைஅனுப்பி சோதனை செய்தனர். இந்த சோதனையில், உள்ளே குண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.எனவே, பார்சலை போலீசார் பிரித்து பார்த்தனர். உள்ளே திரட்சைப் பழங்கள், கிரீம் பிஸ்கட்டுகள் மற்றும் சிலஸ்வீட்கள் இருந்துள்ளன. அட இவ்வளவு தானா என ஆச்சரியப்பட்ட போலீசார் மத்தியில் ஒரு போலீசாருக்குமட்டும் சந்தேகம் வந்தது.
கூர்ந்து நோக்கிய அவர், கிரீம் பிஸ்கட் மற்றும் ஸ்வீட் ஆகியவற்றின் நிறத்தில் ஏற்பட்ட மாறுதலை கண்டறிந்தார்.இதையடுத்து, அந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடாமல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பொருட்களைப் பரிசோதனை செய்த நிபுணர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதில், சயனைடுதடவப்பட்டிருப்பதை கண்டறிந்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தையே மொத்தமாக அழிக்கசதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதை போலீசார் சாதுர்யமாக கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அனைத்துப் போலீஸ் ஸ்டேஷன்களையும் உஷார்படுத்தி, சர்குலர்அனுப்பியுள்ளார். ஸ்வீட் பாக்ஸ் பார்சல் கேரள மாநிலத்திலிருந்து வந்திருப்பதைப் போலீசார் அறிந்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை கேரள மாநிலம் விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications