கட்சி மாறியது ஏன்?...பாண்டி எம்.எல்.ஏ. விளக்கம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி எம்.எல்.ஏ. எம்.மஞ்சினி, தான் கட்சி மாறியது குறித்து சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியத்திடம் வியாழக்கிழமை எழுத்துப் பூர்வமாகவிளக்கம் அளித்தார். ஆனால் சபாநாயகர், மஞ்சினி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. மஞ்சினி சில மாதங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார். கட்சிமாறியதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும் என்றும், கட்சி மாறியது குறித்து ஆகஸ்ட் 10 ம் தேதிக்குள் மஞ்சினி எழுத்துப் பூர்வமாகவிளக்கம் அளிக்க வேண்டுமென்றும் சபாநாயகர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தான் கட்சி மாறியது குறித்து மஞ்சினி விளக்கம் அளித்தார். ஆனால் அதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டதால், கட்சித் தாவல் தடுப்புச்சட்டத்தின்படி அவரது பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications