திருவனந்தபுரத்தில் ஒரு காந்தி!
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஒருவர், 1246 நாட்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி தனதுபோராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்டம் கீழ்திங்களைச் பகுதியைச் சேர்நதவர் ஜகதன் (54). இவர்கேரள தலைமைச் செயலகம் முன்பு 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதிகுடும்பத்துடன் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்,
ஒரு கும்பல் அவரை வீட்டை விட்டுத் துரத்தியதையும், அவரது மகளைகொடுமைப்படுத்தியதையும் எதிர்த்து தனது போராட்டத்தை துவக்கினார் ஜகதன்.அவரது போராட்டம் தொடர்ந்தது.
தலைமைச் செயலகம் எதிரில் குடிசை போட்டுக் கொண்டு குடும்பத்தினருடன்தங்கியிருந்தார் ஜகதன். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல...1.246 நாட்கள் அது நீடித்தது.இறுதியில், தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமையன்று மூட்டைமுடிச்சுகளுடனும், பாத்திரங்களுடனும் தனது ஊருக்குக் கிளம்பிச் சென்றனர் ஜகதன்குடும்பத்தினர்.
போராட்டம் நடத்திய நாட்களில் எண்ணற்ற ஊர்வலங்கள், கூட்டங்கள்,வேலைநிறுத்தங்களைப் பார்த்துள்ளார் ஜகதன். தான் போராட்டம் நடத்திய காலத்தில்தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜகதன்.
போகும்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதியே என்றும் வெல்லும்.நீதி வெல்வதற்கு காலதாமதம் ஆகலாம். ஆனால் நீதி நிச்சயமாக வெல்லும். நான் என்போராட்டத்தை முன்னரே முடித்துக் கொள்ள விரும்பினேன். நான் வெற்றி பெறநாட்களானதால் என் போராட்டம் நீண்ட காலமாக தொடர்ந்தது என்றார்.
கேரள மாநிலத்தில் நீண்ட நாட்கள் சத்தியாகிரகம் கொண்டவர் என்ற பெயரையும்ஜகதன் புரிந்துள்ளார்.
மீண்டும் ஒரு காந்தியைப் பார்த்த உணர்வில் இருக்கிறார்கள்திருவனந்தபுரத்துக்காரர்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications