சொத்து...சொத்து: முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி, மனைவி, மகளுக்கு சிறை தண்டனை
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக ரூ 77.49 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் பொன்னுசாமிக்கு 3 வருடக் கடுங்காவல்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுளளது.
இவ் வழக்கில், தொடர்புடைய அவரது மனைவி பிரபாவதி, மகள் மாலா, சகோதரர்கள் வெங்கடேசன், ராஜப்பா ஆகியோருக்கு ஒரு வருடக்கடுங்காவல் தண்டனையும், ரூ 10, 000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் பொன்னுச்சாமி. அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ 77.49 லட்சம்சொத்து சேர்த்ததாக மேல் புகார் எழுந்தது.
இதையடுத்து 1998 ம் ஆண்டு ஜூலை 9 ம் தேதி இவர் மேல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. 1999 ம் ஆண்டு ஜனவரி 25 ம்தேதி முதல் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நடந்தது.
இரண்டாவது தனிநீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் இவ்வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் உள்பட பலர்விசாரிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு3 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ ஒரு லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ராதாகிருஷ்ணன்.
யு.என்.ஐ.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications