ஐ.நா. கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தில் இந்திய, பாகிஸ்தான் பிரதிநிதிகள் மோதிக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்குக் கடுங்கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மதத்தின் பெயரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்து வருகிறது என்று பலநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.

ஜெனிவாவில் ஐ.நா.வின் மனித உரிமை கமிஷன் நடந்தது. இதில் பாகிஸ்தான் சார்பில் ஃபரூக் இக்பால்கான், இந்தியா சார்பில் ஆர்.பிரசாத் ஆகியோர்கலந்து கொண்டனர்.

அப்போது இந்தியா, காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

அதற்குப் பதில் அளித்து இந்தியா பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தது.

பல நேரங்களில் இரு நாட்டு பிரதிநிதிகளும் மோதிக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் காஷ்மீரில் நடந்த படுகொலை பற்றி வருத்தம்தெரிவிக்கப்பட்டது.

இந்த படுகொலைகளுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்றும், மதத்தின் பெயரில் காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்றும் கூட்டத்தில்பேசிய பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில் ஜூனைதா ஆலிவர், ஹிமாலயன் ரிசர்ச் அன்ட் கல்ச்சுரல் அமைப்பின் சார்பில் காலித் ஜஹாங்கிர் உள்பட பலர் பாகிஸ்தான் மீதுகுற்றம்சாட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+