வீரப்பனுக்கு 2 நாட்களில் பதில் சொல்வோம் என்கிறார் கர்நாடக முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனக்கடத்தல் வீரப்பன் விதித்துள்ள கோரிக்கைகள், கேட்டுள்ள விளக்கங்கள் ஆகியவற்றை கர்நாடக அரசு திங்கள்கிழமைக்குள் தயார் செய்து,நக்கீரன் கோபால் மூலம் வீரப்பனுக்கு கொடுத்தனுப்பப்படும் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

ஜூலை 30 ம் தேதி நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள்கடத்திச் சென்றனர்.

பின்னர் இருமாநில அரசுகளின் சார்பில், நக்கீரன் கோபால் தூதராக காட்டுக்குச் சென்றார். அவர் மூலம் முதலில் 10 நிபந்தனைகளை விதித்தார்வீரப்பன்.

தற்போது அரசுத் தூதர் சென்னை திரும்பி விட்ட நிலையில் அவரிடம் மேலும் நான்கு கோரிக்கைகளை வீரப்பன் சொல்லி அனுப்புயுள்ளார். 19 ம் தேதிக்குள்இவற்றிற்கான பதில்களை அனுப்ப வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளார் வீரப்பன்.

வீரப்பனின் கோரிக்கைகளுக்கான தெளிவான விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜூகளை தயாரித்து திங்கள்கிழமைக்குள் மீண்டும் காட்டுக்குச் செல்லும்அரசுத்தூதர் கோபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வீரப்பனின் புதிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இரு மாநில அரசுகளுக்கும் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. தமிழ்நாடு அரசும் வீரப்பனின்கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளது.

காவிரிப்பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்கவில்லை என்று வீரப்பன் கருதுகிறார். வீரப்பன் கருதுவது போல் காவிரி பிரச்சனை ஒரு பிரச்சனையேஅல்ல. குறிப்பிட்ட காலத்தில் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி.தண்ணீர் திறந்து விடப்படும்.

கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து வீரப்பன் கவலைப்பட வேண்டாம். இது குறித்த தெளிவான பதில்கள் வீரப்பனுக்குஅனுப்பி வைக்கப்படும்.

கோபால் மூலம் வீரப்பன் கொடுத்தனுப்பிய 2 வீடியோ கேசட்டுக்களைப் போட்டுப் பார்த்தேன். அதன் மூலம், நடிகர் ராஜ்குமார் ஆரோக்கியமாகஇருப்பதையும், வீரப்பனால் அன்புடன் நடத்தப்படுவதையும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் விடுவிக்கும் முயற்சியில் இரு மாநில அரசுகளும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும்எடுத்து வருகிறது என்றார் கிருஷ்ணா.

பள்ளிக்கூடங்கள் திறப்பு

இதற்கிடையே ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் விடுமுறை விடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் ஆகஸ்ட் 14 ம் தேதி திறக்கப்படும் என்று கல்விஅமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+