நாகா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி வைத்துள்ள ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கொஹிமா:

நாகாலாந்தில் தேசிய சோஷலிஷ நாகாலாந்து கவுன்சில் (என்.எஸ்.சி.என்.) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மீதான தாக்குதலைராணுவம் ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரஸ் கபூர் கூறுகையில், என்.எஸ்.சி.என் அமைப்பின் கப்லாங் பிரிவினர் அரசுடன்பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்காக சண்டை நிறுத்தத்துக்கும் தயாராக உள்ளனர். இதற்கானவரைமுறைகளில் ராணுவமும் தீவிரவாதிகளும் ஈடுபட்டுள்ளன. அக்டோபரில் சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும்.

சண்டை நிறுத்தம் முழுமையாக அமலாக வேண்டுமானால், கொலைகள், பொதுமக்களை கடத்துதல், கட்டாய வரி வசூல்,ஆயுதங்களுடன் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் வந்து செல்லுதல் ஆகியவற்றை தீவிரவாதஅமைப்பு நிறுத்த வேண்டும். இந்த வரைமுறைகளை முழுமையாக நிறைவேற்ற 2 மாதங்கள் ஆகிவிடும்.

தீவிரவாதத்தால் மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிராக மலைவாழ் மக்கள், கிராமங்கள்,சர்ச்சுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார்.

இதற்கிடையே சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு வட-கிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாதஅமைப்புகளும் பொது மக்களுக்கு கோரிக்கையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளன. இதையடுத்து இந்த மாநிலங்களில் பாதுகாப்பு மிகவுமபலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+