ஒலிம்பிக்: தீவிர பயிற்சியில் இந்திய ஹாக்கி அணி
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
டெல்லியில் அணியின் துணை கோச் ஹீரேந்திர சிங்கின் நேரடி கண்காணப்பில் தேசிய விளையாட்டரங்கில் இந்த பயிற்சி நடந்து வருகிறது.கேப்டன் பாஸ்கரனும் டெல்லி வந்து சேர்ந்துவிட்டார்.
அணி மிகவும் உற்சாகத்துடனும் தீவிரமாகவும் பயிற்சியில் ஈடுபட்டுளளதாக ஹீரேந்திர சிங் கூறினார். புதிய தொழில்நுட்பங்கள்,அணுகுமுறைகளுடன் அணி இந்த முறை ஒலிம்பிக்கில் களம் இறங்கும்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுடன் மோதும் நாடுகள் பட்டியலில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கொரியா, போலந்து ஆகியநாடுகள் உள்ளன. இந்த எல்லா அணிகளையுமே நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்கிறார் சிங்.
ஒலிம்பிக் போட்டிக்குக்கு இன்னும் 1 மாதம் இருக்கிறது. ஆனாலும், சில தினங்களில் அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுகிறது.அங்கு சில பயிற்சிப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கும்.
இந்த பயிற்சிப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் விளையாட இருக்கின்றன. இது தவிரஹாலந்துடனும் போட்டிக்கு ஏற்பாடு செய்ய முயன்று வருகிறோம். மேலும் ஆஸதிரேலியாவில் உள்ள உள்நாட்டு ஹாக்கிஅணிகளுடனும் விளையாடுவோம் என்றார்.
முன்னதாக பெங்களூரில் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications