அடம் பிடிக்காதீங்க ...பாகிஸ்தானுக்கு அராபத் அறிவுரை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணபாகிஸ்தானும், இந்தியாவும் முயற்சிக்க வேண்டும் என்று பாலஸ்தீன விடுதலைஇயக்கத் தலைவர் யாசர் அராபத் கூறியுள்ளார்.
சீனா செல்லும் வழியில், ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்வந்துள்ள அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் விவகாரம் குறித்துஎன்னிடம் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் விளக்கினார். இப்பிரச்சினையில் விரைவில்தீர்வு ஏற்பட வேண்டும். சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதற்குத் தீர்வு காணமுயற்சிக்க வேண்டும்.
ஜெருசேலத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமையபாகிஸ்தான் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது என்றார் அராபத்.
சீனா செல்லும் அராபத் அங்கிருந்து இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் வருகை தருகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications