தமிழகத்தில் களை கட்டிய சுதந்திர தின விழா
சென்னை:
இந்த நூற்றாண்டின் முதல் சுதந்திர தினம் தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன்செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் தமிழக முதல்வர்கருணாநிதி, தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். தனதுஉரையில், திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முன்னேற்றத்திற்காக பலநலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றார் கருணாநிதி.
பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தில்தொழில் துறை முன்னேற்றதிற்காகவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் அவர்விவரித்தார்.
தமிழகம்தான் கார்கில் தியாகிகள் குடும்பங்களுக்கு உதவி வழங்கியதில் முதலிடம்வகிக்கிறது என்று குறிப்பிட்ட முதல்வர், தமிழக அரசுதான் சுதந்திர போராட்டதியாகிகள் ஓய்வூதியத்தை அதிகப்படுத்தியுள்ளது.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை பெருமமைப்படுத்தும் விதமாக நினைவிடங்கள்கட்டப்பட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
மாலையில் முதல்வர் கருணாநிதி, சுதந்திரப் போராட்ட தியாகி ஸ்ரீநிவாசனின் அஞ்சல்தலையை வெளியிடுகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications