வீரப்பன் விவகாரத்தை குழப்பாதீர்கள் ... மூப்பனார்
சென்னை:
வீரப்பன் விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லி பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என்றுத.மா.கா.தலைவர் மூப்பனார், ஜெயலலிதாவுக்கு மறைமுக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், த.மா.கா.தலைவர் மூப்பனார், ஐக்கியகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மொகித் சென்னை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின் மூப்பனார் நிருபர்களிடம் பேசியதாவது:
ஐக்கிய தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மொகித் சென் எனது நண்பர். அவரை நான் மரியாதைநிமித்தமாக சந்தித்துப் பேசினேன். சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தில் தமிழக-கர்நாடக அரசுகளின் செயல்பாடுகளைஅ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. வீரப்பன்விவகாரம் முள்ளில் விழுந்த சேலையைப் போன்றது. இதை நிதானமாகத்தான் கையாள வேண்டும்.
வீரப்பன் விவகாரத்தால் பாதிக்கப்படுவது கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள்தான். எனவே, ராஜ்குமார் விடுவிப்புகுறித்தோ, அல்லது ராஜ்குமார் விடுவிப்பிற்காக தமிழக, கர்நாடக அரசுகள் எடுக்கும் நடவடிக்கை குறித்தோவிவாதிப்பதற்கு நேரமில்லை.
இந்த விஷயத்தில் ஆளுக்கொன்றாகச் சொல்லி பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வேண்டாம். வீரப்பன்நிபந்தனைப்படி தடா கைதிகளை விடுவிப்பது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications