வந்தனர் முகமூடிக் கொள்ளையர் .. போனது 50 பவுன் நகை
சென்னை:
சென்னையில் கத்திமுனையில் கணவன், மனைவியை கட்டிப் போட்டு 50 சவரன்நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற முகமூடித் திருடர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை மறைமலை நகர் தேசிய நெடுஞ்சாலையில் வசிப்பவர் ஹரிஹரன். தனியார்நிறுவனத்தில் மேலதிகாரியாக பணிபுரிகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில்தூங்கிக் கொண்டிருந்போது, அதிகாலை 2.30 மணியளவில் நான்கு பேர் கொண்டமுகமூடித் திருடர்கள் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
கத்தி முனையில் மிரட்டி ஹரிஹரனையும், அவரது மனைவி குழந்தைகளையும் கட்டிப்போட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் மற்றும் 25ஆயிரம் ரூபாய் ஆதியவற்றை கொள்ளை அடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிஒடிவிட்டனர்.
கொள்ளை அடிப்பதற்கு முன்பாக வீட்டின் மின் இணைப்பையும், தொலைபேசிஇணைப்பையும் துண்டித்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள். நான்குபேரும் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம், சென்னை புறநகர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்றஐந்தாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications