ரொம்ப நேரம் உட்கார முடியாது...நீதிமன்றத்தில் சசி மனு
சென்னை:
ஒரே இடத்தில் என்னால் அதிக நேரம் உட்கார முடியாததால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து எனக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்று தனி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் சசிகலா.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 66.5 கோடிக்கு சொத்துக்கள்சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்உயிர்த்தோழி. இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் சசிகலா ஆஜராவதில்லை. ஜெயலலிதா ஆஜராகவரும்போதுதான் அவரும் ஆஜராக வருவார்.
இதை உன்னிப்பாக கவனித்த அரசு வக்கீல், நீதிபதியிடம் முறையிட்டார். ஜெயலலிதாவுக்கு ஆயிரம் வேலைஇருக்கும். அதனால் விலக்கு அளிக்கலாம். ஆனால், சசிகலா கண்டிப்பாக ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றுகேட்டார். அதை ஏற்று சசிகலாவைக் கண்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி புதன்கிழமை நடைபெற்றவிசாரணையின்போது முதலாவது தனி நீதிமன்றத்தில் சசிகலா ஆஜரானார்.
இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.லத்திகா சரண், ஜெயலலிதா முதல்வராகஇருந்தபோது செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜவகர் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
அவர்களிடம் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் விசாரணை நடத்தினார். பின்னர் சசிகலா ஒரு மனுவைநீதிபதியிடம் தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனக்கு பல்வேறு உடற்கோளாறுகள் உள்ளன. இதற்காக சமீபத்தில்சிகிச்சை எடுத்தேன். என்னால் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருக்க முடியாது. அப்படிச் செய்தால் நான்எடுத்துக் கொண்ட சிகிச்சை பயன் தராது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்களை தேவையில்லாமல் கட்டாயமாக ஆஜர்படுத்தச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வழக்கில் அரசுத் தரப்பினர் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குஎதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். எனக்கு பதிலாக என் வக்கீல் ஆஜராகஅனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சசிகலா.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!