"கோவை போலீசுக்கு வந்த பிஸ்கட்டில் இருந்தது சயனைடுதான்
கோவை:
போலீசாருக்கு வந்த பார்சலில் இருந்த பிஸ்கட் மற்றும் பேரீச்சம் பழம் ஆகியவற்றில் சயனைடு கலக்கப்பட்டுஇருப்பதை பரிசோதனை முடிவுகள் உறுதி செய்தது.
கோவையில் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு (பி12) கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பார்சல் வந்தது. அதில்,இனிப்புகள், பழங்கள் மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவை இருந்தது.
சரியான முகவரி குறிப்பிடப்படாத அந்த பார்சலில் இருந்த உணவுப் பொருட்கள் மீது போலீசாருக்குச் சந்தேகம்வந்தது. இனிப்பு மற்றும் பிஸ்கட்டின் நிறத்தில் மாறுதல் இருந்ததைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து இவற்றை சென்னையில் உள்ள ரசாயன பரிசோதனை நிலையத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.ஆய்வு முடிவில், பிஸ்கட்டில் உள்ள கிரீமிலும், பேரீச்சம்பழத்திற்குள்ளும் சயனைடு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கூண்டோடு போலீசாரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்களைக் கண்டறியும் பணியில் போலீசார்இறங்கினர். இதில், கேரளாவில் இருந்து பார்சல் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. அதில், சக்திவேல் என்பவர்வடக்கன்சேரி என்ற இடத்திலிருந்து அனுப்பியதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கேரளாவிற்குச் சென்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சக்திவேல் என யாரும் அங்குஇல்லை எனத் தெரிய வந்தது. இதன் மூலம், தீவிரவாதச் செயலில் ஈடுபடும் யாராவது இது போன்ற பார்சலைகோவையிலிருந்தே அனுப்பியிருக்கலாம் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications