தமிழைக் கொச்சைப்படுத்தாதீர்கள் ... கூறுகிறார் தமிழ்க்குடிமகன்

Subscribe to Oneindia Tamil

கோவை:

அரசு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்கள் மீதுசட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கிறேன்என கோவையில் அமைச்சர் தமிழ்க் குடிமகன் பேசினார்.

கோவையில் நடந்த தமிழ்மொழி ஆட்சிக் கருத்தரங்கில், மாநில அறநிலையத்துறைமற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ் குடிமகன் பேசியதாவது:

தமிழ் வளர்ச்சி குறித்த தகவல்கள் மற்றும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மக்களைஇன்னும் சரியாக சென்றடையவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் இணைய மாநாடு நடத்தியபிறகு, இதனைப் பின்பற்றி சிங்கப்பூரில் இரண்டு முறை மாநாடு நடத்தி விட்டனர்.

தமிழகத்தில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில், அனைவரும் உபயோகிக்கும்வண்ணம் உள்ள விசைப் பலகையை தேர்வு செய்யவும், உருவாக்கவும் முடிவுகள்மேற்கொள்ளப்பட்டன.

கணிணித் தமிழுக்கு 25 விதமான விசைப் பலகைகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. அரசு கணிணித் தமிழை வளர்க்க 15 வகையான மென்பொருளைஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ் மட்டுமே அதிக நாடுகளில்பயன்படுத்தப்படுகிறது. 39 நாடுகளில் தமிழ் மொழி உள்ளது. இவ்வளவு தூரம்முன்னேற்றம் கண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை மறையவில்லை.

தமிழைப் பயன்படுத்தி அறிஞர்கள் ஆனவர்கள் இருந்தாலும், நாம் இன்னும் அதனைப்பின்பற்றவில்லை.

தமிழக அரசு தாய் மொழியில் நூல்களை உருவாக்கும் முயற்சியில்

தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 20 நூல்கள்வெளியிடப்பட்டுள்ளது.

5 நூல்கள் மருத்துவம் சார்ந்தவை. 5 நூல்கள் தமிழ்ச் சொல் அகராதி உள்ளவை.இதுவரை ஆங்கிலச் சொல்லிற்கு இணையாக 57 ஆயிரம் கலைச் சொற்கள்உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. இது தவிர 17 ஆயிரம் கலைச் சொற்கள்உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழை ஆட்சி மொழியாக மாற்ற அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. தமிழக அரசு தலைம்ை செயலகத்தில் கடந்த ஆண்டு 50 சதவீதம் மட்டுமேதமிழ் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது அரசு ஆணைகள் எல்லாம் தமிழில் மாற்றியமைக்கப்பட்டு 90 சதவீதமாகதமிழ் மொழிப் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கையெழுத்துப் போட வேண்டும் என தமிழக அரசு ஆணையே உள்ளது.ஆனால் இதனை சரிவர சிலர் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. தமிழில்கையெழுத்திடவில்லையென்றால், சட்டத்தை மீறியதாக அவர்களைத் தண்டிக்கஇயலும். எனவே, இத்தகைய நடவடிக்கையை எடுக்காமல், இதனைஎச்சரிக்கையாகவே அதிகாரிகளுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

மொழி வாரி மாநிலமாக அறிவித்தபோதே மொழியைப் பற்றி முடிவெடுக்க அதிகாரம்கேட்கப்பட்டுள்ளது. ஆங்கிலமே வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆங்கிலத்தைத் தேவையான இடங்களில் மட்டுமே உபயோகியுங்கள். பெர்லின்,மொரிஷியஸ், டென்மார்க் போன்ற நகரங்களில் கூட தமிழ் இரண்டாவது மொழியாகஅங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சொற்களைப் பலர் இன்னும் கொச்சைப் படுத்திப் பேசுகின்றனர். தமிழைக்கொச்சைப் படுத்தாதீர்கள். இப்படியே போனால் மேலை நாடுகளில் தமிழ் நன்குவளர்ச்சி பெற்று விடும்.

ஆனால், வருங்காலத்தில் தமிழகத்தில் நலிவடைந்து விடும். இதற்கு தொலைக் காட்சிப்பெட்டியில் தோன்றும் இளம் பெண்களே சான்று.

நான் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், கடவுச் சீட்டில் (பாஸ்போர்ட்) தமிழில் தான்கையெழுத்துப் போடுகிறேன்.

ஆனால், இதற்கு யாரும் எந்த நாட்டிலும் இது வரை எதிர்ப்புத் தெரிவித்ததேயில்லை.ஆங்கிலத்தை அறவே ஒழிக்கவில்லை. ஆனால் தமிழை வளர்ச்சிப் பெறச் செய்வதேநமது நோக்கம்.

நம்முடைய உணர்வுகளை ழுமையாகப் புலப்படுத்த தாய் மொழி ஒன்று தான்அருமையான வழி. உதைத்து திருத்த ஒரு படை வேண்டும் என்ற பாடல் தமிழில்உண்டு. ஆனால் அந்த நிலையை உருவாக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

எனக்கு மூக்குக் கண்ணாடியைப் போன்றது ஆங்கிலம். இதனைத் தேவையானபோதுஅணிந்து கொள்வேன். ஆனால் கண்களைப் போன்றது தமிழ் என்று தமிழ்க்குடிமகன்பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட உதவிக் கலெக்டர் சந்தானம், மாநகராட்சி கமிஷனர்ராஜேந்திரகுமார், மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+