சொத்து சேர்த்த வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திகுடும்பத்தோடு விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோது ரூ. 83.2 லட்சம் அளவுக்குசொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியும்அவரது குடும்பத்தினர் 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கொடுத்த தீர்ப்பில்இவர்களை விடுவித்து உத்தரவிட்டார். அ.தி.மு.க. ஆடசிக் காலத்தில் 1993 முதல் 1996வரை வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூரத்தி.

4.11.1997-ம் ஆண்டில் இவ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.11.12.1008 முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது.

அரசு தரப்பில் 113 சாட்சிகளும், 31 எதிர்த்தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். இருதரப்பு வாதங்களும் ஆகஸ்ட் 9-ம் தேதி முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்புகூறப்பட்டது.

தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

இவ்வழக்கில் சத்தியமூர்த்தியின் மாமியார், மாமனார் உள்ளிட்ட 5 பேர் மீதுசாட்டப்பட்டுள்ள குற்றங்கள் நிலை நாட்டப்படவில்லை என்று அரசு தரப்பில் வாதிட்டவக்கீல் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, இவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களைசத்தியமூர்த்திதான் சேர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எனவே அவர்களை விடுதலை செய்கிறேன். அதே போல் சத்தியமூர்த்தியும் அவரதுமனைவி சந்திராவும் வருமானத்தை மீறிச் சொத்துக்கள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளகுற்றச்சாட்டும் சரிவர நிரூபிக்கப்படவில்லை.

இந்த இருவருக்கும் ஏற்கனவே நஞ்செய், புஞ்செய் நிலங்கள் உள்ளன. அதன் மூலம்வருமானம் கிடைத்துள்ளது. இறால் பண்ணை, மதுக்கடை போன்றவற்றின் மூலமும்இவர்களுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல் செலவை மட்டும் புலன் விசாரணைநடத்தியவர்கள் பெரிதாக்கியுள்ளனர். வழக்கில் உண்மை நிலையை பிரதிபலிக்காதவகையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.

கட்சிக்காக அவர் வசூலித்து வைத்திருந்த 20 லட்ச ரூபாய் பணத்தையும் அவரதுவருமானக் கணக்கில் சேர்த்துள்ளனர். அதெல்லாம் கட்சிப் பணம் என்பதை எதிர்த்தரப்பினர் முறையாக நிரூபித்துள்ளனர். எனவே இவ் வழக்கில் அரசு தர்பபினர் சரிவரபுலன் விசாரணை நடத்தப்படவில்லை.

அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 17.1 லட்சம் பணத்தை உடனடியாக அவரிடம்ஒப்படைக்க வேண்டும். அவர்கள் இருவரையும் விடுதலை செய்கிறேன் என்று நீதிபதிதீர்ப்பளித்தார்.

சத்தியமூர்த்தி தவிர அவரது மனைவி சந்திரா, மாமனார் மாயழகுத் தேவர், மாமியார் தங்கம் அம்மாள், மைத்துனிஅஞ்சலி தேவி, அண்ணன் மகள்கள் நாகவள்ளி, புஷ்பவள்ளி ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+