70-வது பிறந்த நாளை டெல்லியில் கொண்டாடிய மூப்பனார்
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் தனது 70வது பிறந்த நாளை டெல்லியில்சனிக்கிழமை கொண்டாடினார்.
அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக முதல்வரும் தி.மு.க.தலைவருமான கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட பலதலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள தமாகா தலைமைஅலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு சார்பில்இரண்டு ரத்த தான முகாம்கள் நடைபெற்றன.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்த இம் முகாமில்முன்னாள் மத்திய அமைச்சர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்,மாநிலங்களவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தவிர கோயில்களில் விசேஷ வழிபாடு, அனாதை இல்லங்களில் அன்னதானம்என்று பல்வேறு நிகழ்ச்சிகள் கட்சியினரால் நடத்தப்பட்டன.
மாலையில் ப.சிதம்பரம் தலைமையில் மூப்பனார் பிறந்த நாள் விழாக் கூட்டம்நடைபெற்றது. இதில் த.மா.கா முன்னணித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இன்று பிறந்த நாள் விழாகாணும் தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ உளமாரவாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா தொலைபேசியில் மூப்பனாருக்குவாழ்த்துத் தெரிவித்தார்.
மூப்பனாரில் 70வது பிறந்த நாளையொட்டி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்செய்து வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை சென்னையில் மூப்பனார்முன்னிலையில் நடைபெறுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications