தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது - கருணாநிதி இன்று வழங்குகிறார்
சென்னை:
1999, 2000-ம் ஆண்டுகளுக்கான தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் அறிஞர்களுக்கானவிருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகின்றன.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகளை முதல்வர்கருணாநிதி வழங்குகிறார்.
சென்னையில் உள்ள ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவுக்கு எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர். எம்.வீரப்பன் தலைமை தாங்குகிறார்.
1999-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் விவரம்:
ராமானுஜர் விருது - விஞ்ஞானி அப்துல் கலாம்.
அண்ணா விருது - கவிஞர் கா. செல்லப்பன்.
கலைஞர் விருது - சிற்பி வை. கணபதி ஸ்தபதி.
எம்.ஜி.ஆர். விருது - எழுத்தாளர் வலம்புரி ஜான்.
2000-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் விவரம்:
ராமானுஜர் விருது - தொழில் அதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்.
அண்ணா விருது - எழுத்தாளர் பகீரதன்.
கலைஞர் விருது - எழுத்தாளர் வல்லிக்கண்ணன்.
எம்.ஜி.ஆர். விருது - எழுத்தாளர் பிரேமா நந்தகுமார்.
இவ் விழாவில் தமிழக கல்வி அமைச்சர் க. அன்பழகன், கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications