ரங்கராஜன் குமாரமங்கலம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உடல் நிலை தொடர்ந்துகவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன் திடீரென்று கோமா நிலைக்கு ரங்கராஜன் உடல் நிலை சென்றது.உடனே, அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் அவர் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரங்கராஜன் உடல் நிலை திடீரென்று கோமா நிலைக்குச் சென்றதற்கான காரணத்தைஅறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தீவிர பரிசோதனைக்குப் பிறகுமைலாய்டு லூகெமியா பிரச்சினை காரணமாக இந்த கோமா நிலை ஏற்பட்டிருக்கலாம்என்று கருதப்படுகிறது.

தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர் காப்பு உபகரணங்கள்உதவியுடன்தான் ரங்கராஜன் குமாரமங்கலம் சுவாசித்து வருகிறார். உடலில் எந்தஅசைவும் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரங்கராஜன் உடல் நிலை குறித்து அறிய இந்த வாரத்தில் இரண்டாவது முறையாகமருத்துவமனைக்கு வந்த பிரதமர் வாஜ்பாய், மருத்துவர்களை கலந்தாலோசித்தார்.ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு தக்க, தீவிர சிகிச்சையைத் தொடர்ந்துமேற்கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+