அரசு பொது மருத்துவமனை புதுக் கட்டடம் வேண்டும்-சங்கரய்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்டவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைச

சென்னை அரசு பொது மருத்துவமனையில் காசநோய் பிரிவு கட்டடத்தின் இரண்டாவது தளத்தின் மையப் பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் ஒரு நோயாளி ஒருவர்மரணமடைந்துள்ளார்.

இரண்டு டாக்டர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். கட்டடப் பராமரிப்புபணி காரணமாக முதல் தளம் காலியாக இருந்ததால் அங்கு நோயாளிகள் யாரும் இல்லை.

இல்லையேல் மேலும் பலர் இவ் விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. காலாவதியானபராமரிப்பற்ற பழமையான கட்டடத்தை மருத்துவ சிகிச்சைக்காகத் தொடர்ந்து பயன்படுத்தியதே இந்த விபத்துக்குக் காரணம்.

மனித உயிர்களைப்பற்றி கவலைப்படாத தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டிக்கிறோம். தலைநகரிலேயே இதுபோன்ற பழமையானகட்டடங்களில் மருத்துவமனைகள் இயங்கும் நிலை உள்ளது என்றால் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மருத்துவமனையின் நிலைமை எப்படி இருக்குமோஎன்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தக்க இழப்பீடும், காயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்கவேண்டும்.

இந்த சம்பவத்தை அனுபவமாகக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டடங்களை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டடங்களைக்கட்டவேண்டும் என்றார் சங்கரய்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+