நாகூர் தர்காவில் கந்தூரி விழா - 30ம் தேதி கொடியேற்றம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

நாகூர் தர்காவில் 443-வது கந்தூரி விழா வருகின்ற 30-ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்குகிறது.

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய புண்ணியத் தலங்களில் ஒன்றான நாகூர் தர்காவில்ஆண்டுதோறும் கந்தூரி விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த ஆண்டின் கந்தூரி விழாசெப்டம்பர் 12-ம் தேதி வரை நடைபெறும். 30-ம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்துநாகூருக்கு கொடி ஊர்வலம் நடைபெறும்.

ஊர்வலத்தின் முடிவில் இரவு 8.30 மணிக்கு தர்கா கலீபா முகம்மது கலீப் துவாஓதியபின் வாணவேடிக்கைகளுடன் 5 மனோராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிஏற்றப்படும்.

செப்டம்பர் 8-ம் தேதி இரவு தர்பூத்து என்னும் சந்தனக்கூடு நாகப்பட்டினத்திலிருந்துகிளம்பி மறுநாள் சனிக்கிழமை காலை நாகூரை சென்றடையும். பின்னர் ஆண்டவர்சமாதியில் சந்தனம் பூசும் விழா நடைபெறும்.

இந்த கந்தூரி விழாவுக்கு லட்சக்கணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்கும் பணியில் போலீஸாரும் அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் வசதிக்காக முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி மற்றும் ரயில்வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+