ரங்கராஜன் அஸ்தி 4 இடங்களில் கரைக்கப்படும்
சென்னை:
டெல்லியில் புதன்கிழமை மரணமடைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலத்தின் அஸ்தி அவரது தொகுதியான திருச்சி உள்பட 4 இடங்களில்கரைக்கப்படவுள்ளது.
ரங்கராஜனின் அஸ்திக் கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையிலுள்ள பாரதீயஜனதா கட்சி தலைமையகத்தில் வைக்கப்படுகிறது. தங்களின் அன்பிற்குரிய தலைவரின்இறு சடங்கள் திருச்சியில் நடக்கவேண்டும் என திருச்சி மக்கள் கூறியிருந்தனர். ஆனால்மருத்துவ காரணங்களால் குமாரமங்கலத்தின் இறுதிச் சடங்கு டெல்லியிலேயேநடந்தது.
குமாரமங்கலம் கடந்த இரண்டு தேர்தலிலும் திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் உடல் நலக்குறைவுகாரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென அவர் உடல் நிலை மோசமாகி கோமா வில் சிலநாட்கள் இருந்து வந்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர்புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
உடல் தகனத்திற்குப் பிறகு ரங்கராஜனின் அஸ்திக் கலசம் சென்னையில் உள்ள பாரதீயதலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
குமாரமங்கலத்தின் அஸ்தி அவரது தொகுதியான திருச்சி, பவானி, ராமேஸ்வரம்மற்றும் கன்யாகுமாரியில் கரைக்கப்படும் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச்செயலாளர் இல. கணேசன் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications