அரசு மரியாதையுடன் ரங்கராஜன் உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய மின் துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உடல் சகல அரசு மரியாதைகளுடன் யமுனை ஆற்றங்கரையில் புதன்கிழமை தகனம்செய்யப்பட்டது.

உடல் நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள அகில் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ரங்கராஜன் குமாரங்கலம்,புதன்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

அவரது உடல் யமுனை ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் மின்சார தகனக் கருவியில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மகன் மோகன்தீமூட்டினார். மயானத்துக்கு ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி, மகள் ருசிரா இருவரும் வந்திருந்தனர்.

முன்னதாக அவரது உடல் அவுரங்கசீப் சாலையில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் மீது மூவண்ணக்கொடி அணிவிக்கப்பட்டு மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இறுதிச் சடங்கில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் பிறஅமைச்சர்கள், முன்னாள் பிரதமர் சந்திரசேகர், காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, மக்களவைச் சபாநாயகர் பாலயோகி, காங்கிரஸ் தலைவர்கள்மன்மோகன் சிங், பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைத் தளபதிகளும் அமைச்சரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

பி.டி.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+