கோர்ட்டில் பெண் போலீஸை அடித்து உதைத்த சகோதரிகள் கைது
சென்னை:
கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் கவிதா. இவரது சகோதரிகள் செல்வி, அரும்பு. கஞ்சா விற்று வந்த கவிதாவை, பென் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிகைது செய்தார்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கவிதாவை புதன்கிழமை அழைத்து வந்தார்.
அப்போது அங்கு வந்த கவிதாவின் சதோதரிகள் செல்வியும், அரும்புவும் கவிதாவிடம் பேசவேண்டும் என்று கூறினர். அதற்கு ஜானகியும் அனுமதித்தார்.
பேசிக்கொண்டே கவிதாவை அங்கிருந்து தப்புவிக்க செல்வியும் அரும்புவும் முயன்றனர். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத்திலிருந்து கவிதா தப்பிஓடினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சப்இன்ஸ்பெக்டர் ஜானகி, தப்பியோடிய கவிதாவைப் பிடிக்க முயன்றார். அப்போது அவரை மேற்கொண்டு செல்லவிடாமல்அவரைப் பிடித்து அடித்து உதைத்தனர் செல்வியும், அரும்புவும்.
ஜானகி கூச்சலிட்டத்தை அடுத்து நீதிமன்றத்தில் பிற பகுதிகளில் காவலுக்கு இருந்த ஆண் போலீஸார் ஓடிவந்து செல்வி, அரும்பு இருவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications