மூப்பனாரை அழைக்கிறது முதலியார்கள் பேரவை
சென்னை:
அடுத்த மாதம் அரசியல் கட்சியாக உருமாறும் அனைத்து முதலியார் பேரவை மாநாட்டில் பங்கேற்கும்படி த.மா.கா. தலைவர் மூப்பனாருக்குஅழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து முதலியார் பேரவை தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில் புதன்கிழமை மூப்பனாரை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் சாதிச் சங்கங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முதலியார்கள் இனத்திற்காகஆரம்பிக்கப்பட்ட அனைத்து முதலியார் பேரவை என்ற சாதிச் சங்கம், அடுத்த மாதம் 15ம் தேதியில் இருந்து அரசியல் கட்சியாக மாறுகிறது.
இதையொட்டி மிகப்பெரிய மாநாடு நடத்தவும், அந்த மாநாட்டில் உண்மையான அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பங்கேற்கச் செய்யவும், பேரவைநிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி புதன் கிழமை சத்தியமூர்த்திபவனில் மூப்பனாரை சந்தித்துப் பேசினர்.
அனைத்து முதலியார் பேரவை அமைப்பு சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஏ.சி.சண்முகம், முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர். அ.தி.மு.க.வை சேர்ந்த அவர் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளர்.
அ.தி.மு.க. வை விட்டு வீரப்பன் நீக்கப்பட்டதும், எம்.ஜி.ஆர். கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் காங்கிரசில் இணைந்தார்.
அங்கேயும் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் ஜெயலலிதா தலைமையை ஏற்று அ.தி.மு.க. வுக்கு வந்தார்.
அ.தி.முக. வுக்கு திரும்பிய சில மாதங்களில் சாதி அரசியலுக்கு தாவி விட தீர்மானித்தார். அதன் விளைவாக அனைத்து முதலியார் பேரவை உருவானது.இப்போது அதையே அரசியல் கட்சியாக்கி, அதன் தலைவர் என்ற பெயரில் நடைபோடத் தீர்மானித்து விட்டார் சண்முகம்.












Click it and Unblock the Notifications