பெட்டி தொழிலை பாதுகாக்க கோருகிறார் வைகோ
சென்னை:
பெட்டித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் கருணாநிதியைத் தலைமைச்செயலகத்தில் சந்தித்துப்பேசினர்.
அப்பொழுது, தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில் கருணாநிதியிடம், வைகோ கோரிக்கை மனு கொடுத்தார். அதில், தீப்பெட்டித் தொழிலில் பலலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக இதில் 90 சதவீதபெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தப்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தீப்பெட்டி இறக்குமதி செய்ய உலக வர்த்தகஅமைப்பின் உத்தரவை இந்திய அரசு அனுமதிக்க உத்தேசித்திருப்பதாக அறிகிறோம். இதன் மூலம் தீப்பெட்டி தொழில் முழுமையாக அழியும் அபாயநிலையில் உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.
எனவே, ஏழைத் தொழிலாளர்களை பாதுகாக்க தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் இயங்கிட தீப்பெட்டி இறக்குமதியை முற்றிலும் தடை செய்யவேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தீப்பெட்டித்தொழிலில் இயந்திரங்கள் புகுத்தப்படுவதால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை தீப்பெட்டிக் கூடங்கள் மூடப்பட்டுதொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசின் அனுமதி இன்றி இயங்கி வரும் எந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை தடை செய்து தீப்பெட்டி தொழிலை வாழ வைக்கும்படியும்கேட்டுக் கொள்கிறோம்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில், தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் பாதுகாக்க அனைத்துநடவடிக்கைகளையும் எடுப்பதாக முதல்வர் உறுதி கூறியுள்ளார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications