குழந்தையைக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கோவை:
குழந்தையைக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீராபாய்.இவர்களுக்கு ஜேஸ்வா (8), ஜெமி (5) என்ற இரு குழந்தைகள் உண்டு.
இவர்களுடன் ஞானமணியின் மைத்துனர் ஆல்பர்ட்சாலின் தங்கியிருந்தார். மின்வாரியத்தில் உதவியாளராக ஆல்பர்ட்சாலின் பணியாற்றி வந்தார். இவர் ஜெமியைஅடிக்கடி திட்டியுள்ளார். இதை ஞானமணி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்ட், குழந்தையைக் கொல்ல முடிவு செய்தார்.
கடந்த 98-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஜெமியின் தலையில் அம்மி குழவிக் கல்லைப்போட்டுக் கொன்றார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆல்பர்ட் சாலினைக் கைது செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இவ் வழக்கில் ஆல்பர்ட்சாலினுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொக்கலிக்கம்வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications