தஞ்சை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

நாகப்பட்டனம் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப்பெற்றெடுத்த பெண், குறைந்த எடை காரணமாக ஐந்து குழந்தைகளையும் சிலநிமிடங்களிலேயே எமனுக்குப் பறிகொடுத்தார்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. பண்ணையில் வேலை பார்த்துவருகிறார். இவரது கணவர் பாலையன். இருவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ளதீபாம்பலப்பட்டனம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒருமகனும், மகளும் உள்ளனர்.

மூன்றாவது முறையாக மஞ்சுளா கர்ப்பமடைந்து இருந்தார். பிரசவத்திற்காக அவரைதிருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். சனிக்கிழமை மஞ்சுளாஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதில் மூன்று ஆண், இரண்டு பெண்குழந்தைகள் அடங்கும்.

பிரசவம் சுகப்பிரசவமாக நடந்தாலும் கூட பிறந்த ஐந்து குழந்தைகளும் குறைந்த எடைகொண்டவையாக இருந்தன. இதனால் பிறந்த சில நிமிடங்களிலேயே ஐந்தும் இறந்துவிட்டன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+