விஷவாயு தாக்கி 2 மாநகராட்சி ஊழியர்கள் சாவு
சென்னை:
சென்னையில் விஷ வாயு தாக்கி மாநகராட்சி ஊழியர்கள் இருவர் இறந்தனர்.
சென்னை இந்திரா நகர் எல்.பி ரோடு 65-வது அவின்யூ பகுதியில் கழிவுநீரகற்று வாரியத்துக்கு சொந்தமானநீரேற்று நிலையம் இருக்கிறது. இந்திரா நகர் பகுதி முழுவதும் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடைதண்ணீர் இந்த நீரேற்று நிலையத்துக்கு வந்து சேருகிறது.
அங்கு இருந்து அந்த நீர் ராட்சத பம்ப்செட் மூலமாக இறைக்கப்பட்டு பெருங்குடியில் உள்ள சுத்தரிப்புநிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு நன்கு சுத்தம் செய்யப்பட்ட பின்னர் கடலுக்கு அனுப்பப்படுகிறது.
கழிவுநீர் வந்து சேருவதற்காக இந்திரா நகர் நீரேற்று நிலையத்தில் 4 பெரிய கிணறுகள் உள்ளது. முதல் கிணறில்விழும் தண்ணீர் , இரண்டாவது கிணற்றுக்கு பாய்ந்து 4 கிணறுகளுக்கும் சென்று வரும்படி அந்தக்கிணறுகள்அமைக்கப்பட்டு உள்ளன.
4 வது கிணற்றில் இருந்து ராட்சத பம்ப்செட் மூலம் சாக்கடை தண்ணீர் இறைக்கப்பட்டு பெரும் குடிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் சுமார் 30 அடி ஆழம் உள்ளவை.
முதல் கிணற்றில், தண்ணீரின் அளவை காட்டுவதற்காக அளவு கோல் ஒன்று பொறுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமைநடந்தது. இதற்காக சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பாஸ்கர் , வில்லவன், மூர்த்தி ஆகிய மூன்று பேரும்முதலாவது கிணற்றில் இறங்கினார்கள்.
கிணற்றுக்குள் இறங்கி 15 அடி ஆழத்தில் அளவுகோலை பொருத்திக் கொண்டு இருந்த பொழுது சாக்கடையில்இருந்து கிளம்பிய விஷவாயு அவர்களைத் தாக்கியது. இதில் வில்லவன், பாஸ்கர் ஆகியோர் மயக்கம் அடைந்துஒருவர் பின் ஒருவராக கிணற்றுக்குள் விழுந்தனர்.
மேலே நின்று அவர்களுக்கு உதவிக் கொண்டு இருந்த மூர்த்தி, கிணற்றுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்றமுயன்றார். தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தார். கிணற்றுக்குள் சாக்கடைத் தண்ணீர் அதிகமாகவந்ததால் இருவரின் உடல்களையும் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ,இருவரது உடலும் மீட்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications