ஸ்பெயின் சுற்றுலாப் பயணிகள் படுகொலை .. குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சிம்லா:
சிம்லாவுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அவர்கள் தங்கியிருந்த மலையேற்ற கூடாரத்திற்குச் சென்று கொலை செய்து பணத்தைக்கொள்ளையடித்த கும்பலை பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள சிம்லா மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இங்கு வெளிநாட்டுப் பயணிகள் பலர் வருவது வழக்கம். ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான மரியா ஏஞ்சல்ஸ் கிரோனஸ் (35) என்பவரும், அவரது மகன் கிறிஸ்டோபெல் (15) என்பவரும் குலு மாவட்டத்திலுள்ளடங்காகோஷ் பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இந்தக் கூடாரத்துக்கு வந்து அவர்களை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துவிட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்று விட்டது.
பக்கத்துக் கூடாரத்தில் தங்கியிருந்த பிரிட்டனைச் சேர்ந்த மார்ட்டின் என்ற வாலிபரையும் அக்கும்பல் தாக்கியது. அவர் டெல்லியில் சிவில்என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.
அக்கும்பல் தப்பித்துச் செல்லுமுன், மூன்று பேரையும் அருகிலிருந்து 40 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தள்ளி விட்டுவிட்டுச் சென்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பித்த மார்ட்டின் அடுத்த நாள் காலை அந்த வழியே வந்த ஒரு போர்ட்டரிடம் இதுகுறித்துக் கூறினார். அவர் அங்குள்ள தேசிய நீர் மின்சாரக் கழகஅதிகாரிகளிடம் கூறினார். அவர்கள் பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மார்ட்டினை டெல்லிக்குக் கொண்டு வரலாமா என்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்து பரிசோதிப்பதற்காகவும் டெல்லியிலிருந்து டாக்டர் ஒருவர்சிம்லா விரைந்துள்ளார். மார்ட்டின் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார் என்று அவரைப் பரிசோதித்த பிற டாக்டர்கள் கூறினர்.
முன்னதாக, தலைமை போலீஸ் கண்காணிப்பாளர் அடங்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று இச்சம்பவத்தில் இறந்த ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப்பயணிகளின் உடல்களை குலுவுக்குக் கொண்டு வருவதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் எங்கிருந்தாலும் அவர்களை உடனடியாகப் பிடிக்கும்படி உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்கும்பல் மாநிலத்திலிருந்து தப்பிக்க முடியாதபடி நகரின் முக்கிய சந்திப்புக்களில் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications