51 தமிழ் தடா கைதிகள் ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

தடா வழக்கின் கீழ் மைசூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 51 தமிழ் தடா கைதிகளுக்கு ஜாமீன் வழங்கி மைசூர் தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி ராஜேந்திரப் பிரசாத் திங்கள்கிழமை இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இதையடுத்து வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார்விரைவில் விடுதலை ஆவதற்கான சாத்தியக் கூறுகள் பிரகாசமாகியுள்ளது.

தடா கைதிகள் ஒவ்வொருவரும் ரூ 10,000 அல்லது ரூ. 20,000 ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வீரப்பனின் கூட்டாளிகள் என்று கருதப்பட்ட இவர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக மைசூர் சிறையில் அடைத்து வைக்கபட்டிருந்தனர். மொத்தம் 121 பேர்வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்கு வீரப்பன் விதித்திருந்த கோரிக்கைகளில் ஒன்று, தடாகைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பது.

இதற்கிடையே, 51 தமிழ் தடா கைதிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப் போவதாக வீரப்பனால் கொல்லப்பட்ட கர்நாடக சப்இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+