சீனாவுடன் இணைய வாய்ப்புண்டு ...கூறுகிறார் தைவான் அதிபர்
தைபே:
தைவான், சீனாவுடன் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தைவான் அதிபர் சென் ஷூய் பியான் கூறினார்.
கடந்த மார்ச்சில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சென் அதிபராகப் பதவியேற்றார். சீனாவுடனான மோதல் தொடர்பாக சென் அறிக்கைவெளியிட்டுள்ளார்.
அதில், தைவானை, சீனாவுக்கிடையே கடந்த 50 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றுசீனா கூறி வருகிறது.
தைவான், சீனாவுடன் இணையுமா என்பதை என்னால் ஊகித்துக் கூற முடியாது. இருப்பினும், தைவான், சீனாவுடன் இணையும் வாய்ப்புக்கள் அதிகம்இருப்பதாகக் கருதுகிறேன். எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருப்பினும் தைவானிலுள்ள 2.3 கோடி மக்கள்தான் இந்த விஷயம் குறித்துமுடிவெடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் சென்.
பரம வைரியாக கருதும் சீனாவின் கோபத்தைக் குறைக்கும் வகையில் சென்னின் அறிக்கை இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications