27 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது
டெல்லி:
விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜுனா விருது 27 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குசெவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ் விருதுகளை குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் வழங்கினார்.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் ஹாக்கி வீரரான தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி அணி கேப்டன் ரமன்தீப் சிங் போன்றசில வீரர்கள் இவ் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
தன்ராஜ் பிள்ளை, ரமன்தீப் சிங் இருவரும் சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக தங்கள் அணியினருடன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர்.
ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்டுள்ளதால் குலாப் சந்த், குர்மீத் கவுர் ஆகியோர் இவ் விருது வழங்கு விழாவில்கலந்து கொள்ளமுடியவில்லை.
துரோனோச்சார்யா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஹவா சிங் ஆகஸ்ட் 14-ம் தேதி இறந்துவிட்டார்.
மேற்கண்ட சில வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் நீச்சல் வீராங்கனை நிஷா மில்லட், பாட்மிண்டன் வீரர் கோபி சந்த்,கோல்ப் வீரர் சிரஞ்சீவ் மில்கா சிங் போன்றோர் நேரில் வந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
விருது பெற வராத வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதை அவர்களது குடும்பத்தினர் வந்து பெற்றுக் கொண்டனர். தன்ராஜ் பிள்ளைக்கானவிருதை அவரது தாய் ஆண்டாள் அம்மா பெற்றுக் கொண்டார்.
அர்ஜுனா விருது பெற்றவர்களுக்கு வெண்கலத்தால் ஆன அர்ஜுனா சிலை, பாராட்டுப் பத்திரம், ரூ. 1.5 லட்சம் பணமுடிப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications