பா.ம.க, ம.தி.மு.க. அநாதைக் கட்சிகள்... பாய்கிறார் காளிமுத்து
மதுரை:
அ.தி.மு.கவின், அடுத்த கட்ட தாக்குதலில் பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க, வாழப்பாடி ராமமூர்த்தியின் ராஜீவ் காங்கிரஸ் கட்சிகள்சிக்கியுள்ளன.
அநாதையாக திரிந்த பா.ம.க, ஜெயலலிதாவின் தயவில் ரத்தம் ஊறியதும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறேன் என்று எங்களையே பதம் பார்க்கநினைக்கிறது என்று அதிமுகவின் அவைத் தலைவர் காளிமுத்து பா.ம.க மீது பாய்ந்துள்ளார்.
மதுரை முனிச்சாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க அவைத் தலைவர் காளிமுத்து பேசினார். தீப்பொறியுடன் கூடியதாக காளிமுத்துவின் பேச்சுஅமைந்திருந்தது.
காளிமுத்து பேசுகிறார்:
தமிழகத்தில் பொதுத்தேர்தல் நெருங்குகிறது. கோட்டையை நோக்கி ஜெயலலிதா நெருங்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் துணை இல்லாமல் தமிழ்நாட்டில்அ.தி.மு.க ஜெயித்த வரலாறு தெரியாதவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.அவர் ஒரு கத்துக்குட்டி. அரை வேக்காடு.
அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கிய கால கட்டத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அதில் காங்கிரஸூக்கு ஏற்பட்ட முடிவு இளங்கோவனுக்குத்தெரியுமா?
அதற்குப்பிறகு பாண்டிச்சேரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் இந்திராவும், காமராஜரும் கூட்டணி ஏற்படுத்தினார்கள். அந்த தேர்தலிலும்பாண்டிச்சேரியில் அ.தி.மு.க ஜெயித்தது. கோவையில் அ.தி.மு.க கூட்டணி தான் வென்றது.
அ.தி.மு.க, கூட்டணி கட்சிகளை மதிக்கும். அ.தி.மு.க தோற்றாலும் கவலை இல்லை. நம்மை நம்பி வரும் கூட்டணி கட்சியை தோற்க விடக் கூடாதுஎன்று எம்.ஜி.ஆர் கூறுவார்.
1977-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் அ.தி.மு.க தனித்து ஆட்சியைப் பிடித்தது. 80-ம் ஆண்டு காங்கிரஸ் - தி.மு.ககூட்டணி சேர்ந்தது. அந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க ஜெயித்தது.
84-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஜெயித்தார்.
1998-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அரசியலில் முகவரி இல்லாத கட்சிகளை ஜெயலலிதா கூட்டணியில் சேர்த்தார். அநாதைகளுக்குஆசிரமத்தில் இடம் கொடுத்தது போல் பி.ஜே.பி , பா.ம.க, ம.தி.மு.க, வாழப்பாடி கட்சி போன்ற அனாதை கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வேட்டி,சட்டை கொடுத்தார் .
பா.ம.கவுக்கு இன்றைக்கு ரத்தம் ஊறியிருக்கிறது. 2006-ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று பா.ம.க கூறுகிறது.
இரண்டு பைத்தியங்கள் ஒன்று சேர்ந்து என்ன வேண்டுமானாலும் பேசும். இரண்டு பைத்தியத்தில் ஒன்று நான் தாஜ்மஹாலை விலைக்கு வாங்கப்போகிறேன்என்றது, அதற்கு மற்றொரு பைத்தியம் தாஜ்மஹாலை நான் விலைக்கு கொடுப்பதாக முடிவே செய்யவில்லையே என்றதாம். இப்படித்தான் பா.ம.கஆட்சியைப்பிடிக்கப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
அநாதையாக தெருவில் திரிந்து, ஜெயலலிதாவால் அரசியலில் முகவரிபெற்றவர்கள் இன்றைக்கு எங்களை பதம் பார்க்க நினைக்கிறார்கள் என்றவர்முடிவில் அ.தி.மு.க தனித்தே ஆட்சியைப் பிடிக்கும் என்று ஆவேச உரை நிகழ்த்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications